More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பேஸ்புக்கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது - அதிபர் ஜோ பைடன்...
பேஸ்புக்கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது - அதிபர் ஜோ பைடன்...
Jul 18
பேஸ்புக்கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது - அதிபர் ஜோ பைடன்...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தியதன் மூலம் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.



கொரோனா வைரஸ் குறித்தும், அதன் தடுப்பூசி குறித்தும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களே இதற்கு காரணம் என குற்றம் சாட்டும் அமெரிக்க அரசு, தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.



இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடனிடம் தடுப்பூசிகள் மற்றும் தொற்று நோய் குறித்து பொய்யை பரப்புவதில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் பங்கு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 



அதற்கு ஜோ பைடன், “தடுப்பூசிகளை பற்றிய தவறான தகவல்களை எதிர்த்துப்‌‌ போராடுவதற்கு பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதள நிறுவனங்கள் போதுமானதாக செயல்படவில்லை. இதன்மூலம் அவர்கள் (சமுக வலைத்தள நிறுவனங்கள்) மக்களை கொல்கிறார்கள்.‌ தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலேயே வைரஸ் தொற்று பரவுகிறது” என பதில் அளித்தார்.



இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களை பேஸ்புக்கில் இருந்து நீக்கி உள்ளோம் என தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr09

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

Apr23

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய

Jun23

ஈரான் அதிபா் தோதலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைம

Jul16

உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள

Jan27

அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத

Mar13

ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந

Oct24

ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ

Feb24

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்

Dec28

 ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட

Jan25

அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற

Mar18

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது

May11

ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா

May29

சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு

Mar12

சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு

Oct03

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை