More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமியின் மரணம் : விசாரணையில் திருப்பம்!
ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமியின் மரணம் : விசாரணையில் திருப்பம்!
Jul 18
ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமியின் மரணம் : விசாரணையில் திருப்பம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த யூட் குமார் ஹிஷாலினி எனும்  16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



 கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு அதிகாரிகளும், பொரளை காவற்துறையினரும் இணைந்து இந்த தீவிர  புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  காவற்துறை ஊடகப் பேச்சாளரும் குற்றவியல் மற்றும் போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதானியுமான சிரேஷ்ட பிரதிப் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.



இறக்கும் போது 16 வயதும் 8 மாதங்களும் பூர்த்தியான குறித்த அட்டன் – டயகம மேற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி விவகாரத்தில் இதுவரை வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.



கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று  உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொரளை காவற்துறையினருக்கு அறிவித்து முறையிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 



இது தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் பொரளை காவற்துறையினரால்   விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, இரசாயன பகுப்பாய்வுக்கான உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.



இந் நிலையில்  பலத்த  தீ காயங்களுக்குள்ளான ஹிஷாலினி  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.



 இதனையடுத்து  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, வழக்கிலக்கம் பீ/52944/2/21 இற்கு அமைய, உயிரிழந்த ஹிஷாலினி தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.



அதன்படி ஹிஷாலினியின் சடலம் மீதான பரிசோதனைகள்  கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.



கொழும்பு விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக்  இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த  நிலையில்,  வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.



விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி,  விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக்,  3 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன், அதில் ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான  சித்திரவதைகள், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி, நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான  சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார்.



இந் நிலையிலேயே ஹிஷாலினி விவகாரத்தில் இருவேறு விடயங்களை மையப்படுத்திகாவற்துறையினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.



ஹிஷாலினி பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா, அவர் வீட்டு வேலைக்காக சேர்க்கப்படும் போது 16 வயதை பூர்த்தி செய்திருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar17

இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்

Mar30

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல

Feb01

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ

May11

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி

May17

வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம

May23

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க

Sep21

மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக

Feb03

கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை

May02

இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ

Sep23

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நில

Sep20

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு

Feb06

நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல

Sep20

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி

Sep19

யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார

Feb17

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்