பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவுக்குச் சிலர் புகார் அளித்ததையொட்டி ரகசிய விசாரணை நடைபெற்றுவந்தது. விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் சிக்குவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் எச். ஜெயலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) பிரிவில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
