கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் கொரோனா பரவலை தடுக்க மிக முக்கியமான ஒன்று முகக்கவசம். இதனால் மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பலர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற பெயரில் மூக்கை முழுமையாக மூடாமல் வாயை மட்டும் மூடுவது, தாடை பகுதியில் முகக்கவசத்தை வைத்துக் கொள்வது , சட்டை பாக்கெட்டில் முகத்தை வைத்துக் கொள்வது என பாதுகாப்பு குறைபாடு உள்ள அம்சங்களுடன் சுற்றி திரிகின்றனர். ஆனால் முகக்கவசம் அணிவதால் சிலரால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு பின்னர் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதின் நிலை குறித்து ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி நடத்திய கள ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ஆம் தேதி நிலவரப்படி சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 842 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதேபோல் சமூக விதிகளை கடைபிடித்து 30 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது