More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆரோக்கியசாமியை பிடிக்க 3 தனிப்படை!
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆரோக்கியசாமியை பிடிக்க 3 தனிப்படை!
Jul 17
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆரோக்கியசாமியை பிடிக்க 3 தனிப்படை!

திருச்சி மணப்பாறை எடுத்து முத்தப்புடையான்பட்டி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த 13ம் தேதி அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை மடக்கிப்பிடித்தனர். ஆனால் இது திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி சொந்தமானது என்று தெரியவந்தது .



இதையடுத்து காவல் நிலையம் வந்த ஆரோக்கியசாமி போலீசார் அனுமதியின்றி வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளார். அத்துடன் போலீசாரையும் தான் திமுக காரன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து வாகனங்களை தவறவிட்ட மணப்பாறை காவல் ஆணையர் அன்பழகனை திருச்சி காவல்துறை தலைவர் ராதிகா பணியிடை நீக்கம் செய்தார்.



அத்துடன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மனோகர் ,பவுல் சேகர், கார்த்திகேயன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அருள்சேசுராஜ் மற்றும் சவரி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக நிலையில் நேற்று திமுக தலைமை திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமியை கட்சியிலிருந்து நீக்கியது.



இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணல் லாரியை விடுவிக்க போலீசை மிரட்டிய சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக நிர்வாகி பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசை மிரட்டிய நிர்வாகி ஆரோக்கியசாமி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முத்தப்புடையான்பட்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக

Jun28

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப

Oct05

திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள

Sep26

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா

Mar08

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா

Feb02

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப

Mar25

வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத

Mar21

அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர

Jul28