More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடு- மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!
புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடு- மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!
Jul 13
புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடு- மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா தொற்றால் வேலை இழந்துள்ள பலர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.



மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இது அந்தந்த பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டது. இதனை ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.



பட்டியலில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் தங்களது பெயர் உள்ள மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைத்தனர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் மாணவர் சேர்க்கை நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் ஒரு சில மாணவர்கள் சம மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு இடங்களை ஒதுக்குவது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் 19-ந் தேதி காலியிட விவரங்கள் அறிவிக்கப்படும். அன்றைய தினம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.



அவர்களுக்கு 21-ந் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். 22-ந் தேதி காலியிட விவரங்கள் வெளியிடப்படும். அன்றைய தினம் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 23-ந் தேதி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன் பின்னர் காலியாக உள்ள இடங்கள் பட்டியல் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.



மாணவர் சேர்க்கை நடைபெறும்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி

Jul26

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ

Jul03

த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள

May11

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா

Apr01

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு

Mar15

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை

Sep20

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா

Jan18

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க

Mar09

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய

Mar12

உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி

Jan25

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப

Mar06

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ

Sep28

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா

Feb17

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி

May25

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா