More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தி பேமிலிமேன் 3 வெப் தொடரில் நடிப்பது உண்மையா? - விஜய் சேதுபதி விளக்கம்
தி பேமிலிமேன் 3 வெப் தொடரில் நடிப்பது உண்மையா? - விஜய் சேதுபதி விளக்கம்
Jul 13
தி பேமிலிமேன் 3 வெப் தொடரில் நடிப்பது உண்மையா? - விஜய் சேதுபதி விளக்கம்

இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘தி பேமிலிமேன் 2’ வெப்தொடர் சர்ச்சையை கிளப்பியது. அதில் சமந்தா ஏற்று நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.



விரைவில் இந்த தொடரின் மூன்றாம் பாகம் தயாராக உள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவின. சர்ச்சை தொடரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு நடிகர் விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார். 



அவர் கூறும்போது, “நான் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்றார். இதன்மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.



அவர் நடித்துள்ள லாபம், கடைசி விவசாயி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun21

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவ

Feb03

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின

Jul13

இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நட

Jul28

1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்

Mar26

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ

Sep20

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர

May03

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த

May02

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில

Aug27

பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போத

Feb24

வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட

Mar13