கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீன படைகள் நுழைந்து விட்டதாகவும், ஒரு இடத்தில் இந்திய-சீன படைகள் இடையே மோதல் நடந்ததாகவும் தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில், ‘‘வெளியுறவு கொள்கையையும், பாதுகாப்பு கொள்கையையும் உள்நாட்டு அரசியல் ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துவது, நாட்டை பலவீனப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு இவ்வளவு பலவீனமாக இந்தியா இருந்தது இல்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.
