More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!
ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!
Jul 15
ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு... அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.



வருடத்திற்கு ரஜினியின் இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள். 



அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.



ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்ககளை நான் வெளியிட்டுள்ளேன்.



என்னைப் போலவே ரஜினியின் படங்களால் பலர் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.



பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.! வெல்டன் அண்ணாத்த.! என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ

May01

சிவகார்த்திகேயனின் சீமராஜா

பொன்ராம் இயக்கத்தில்

Apr28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

Jan22

நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில

Jun07

கமலின் அன்பளிப்பு 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க

Feb21

ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்

Sep17

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ

Aug14

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட

Mar06

நடிகர் அஜித் தொடர்ந்து ஹெச் வினோத் உடன் தொடர்ந்து மூன

Jul13

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந

Jun11

இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன

Jul15

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்

Jul31

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு

Jun09

பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி

May16

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும