More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஈரோட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!
ஈரோட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!
Jul 14
ஈரோட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், மாவட்டத்தில் தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.



ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலையில் வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர், மாநகராட்சி ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வந்தன. மாவட்டத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரம் ஆக இருந்த நிலையில், தொற்று அதிகரித்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.



இதன்படி, மாநகராட்சி பகுதியில் தினமும் 4 ஆயிரம் பேருக்கும், புறநகர் பகுதியில் 6 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்ததால் தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது.



இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 11 லட்சத்து 3 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதில் நேற்று மட்டும் 8 ஆயிரத்து 899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் தற்போது 1,676 பேர் வீட்டு தனிமையில் கண்காணிப்பில் உள்ள நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 43 ஆக குறைந்து உள்ளது.



இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் தொற்றில் இருந்து 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 1 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ

Apr18

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயண

Sep15

மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை

Jun03

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்

Mar30

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ

Mar07

உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண

Mar11

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.

Jul04

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ

Aug15

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ

Jan24

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை

Jul29

குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ

Dec30

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா

Feb02

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப

Oct08

சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல்

Jan19

வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ