மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் சாகர் சந்திரா. இந்த படத்தில் பவன்கல்யாணும், ராணாவும் இணைந்து நடிக்கிறார். ஜூலை 12 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்தபடத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் பவன்கல்யாணுக்கு ஜோடியாக நித்யாமேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.