More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்!
திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்!
Jul 07
திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வருகை தந்தார். அப்போது மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வர் ஆய்வு செய்தார் அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் மற்றும் சாகுபடி குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.



பின்னர் திருவாரூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டூரில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான இல்லத்திற்கு சென்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கேயே இரவு தங்கி ஓய்வு எடுத்தார்.



இன்று (7-ந்தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ரூ.10½ கோடி மதிப்பில் மகப்பேறு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடம் (தாய்-சேய் நலப்பிரிவு), 4 அறுவை சிகிச்சை மையங்கள் கட்டப்பட்டுள்ளது. 70 ஆயிரம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.



தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் விமலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து கார் மூலம் திருக்குவளையில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த இல்லத்திற்கு சென்று அங்கு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து திருவெண்காடு சென்று மதிய உணவுக்குப்பின் கார் மூலம் சென்னை திரும்புகிறார்.



தமிழக முதல்வராக பதவியேற்று முதல்முறையாக சொந்த ஊரான திருவாரூருக்கு வந்த மு.க.ஸ்டாலினை பொதுமக்களும் தி.மு.க.வினரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன

Mar27

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக

Nov05
Jun25

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப

Jan19

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்

Apr03

ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம

Nov23

தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம

Mar08

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே

Jan25

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ

Sep11

இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில

Jun18

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்

May13

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி

Feb05

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப

Jun02

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ

Feb10

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக