More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உலகின் மருந்தகமாக இந்தியா உதவியது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
உலகின் மருந்தகமாக இந்தியா உதவியது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
Jul 07
உலகின் மருந்தகமாக இந்தியா உதவியது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனியா ஆகிய நாடுகளின் தூதர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காணொலி காட்சி மூலம் சந்தித்தனர்.



இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த பாடுபடுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.



பின்னர், அவர்களிடையே காணொலி காட்சி மூலம் அவர் பேசியதாவது:-



உங்கள் அனைவரது நாடுகளுடனும் இந்தியாவுக்கு நல்லுறவு நிலவுகிறது. அமைதி, வளமை என்ற பொதுவான கண்ணோட்டத்தில் இந்த உறவு மிகவும் ஆழமானது.



கொரோனாவுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகத்தின் மருந்தகமே இந்தியாதான்.



கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், அத்தியாவசிய மருந்துகளையும், உபகரணங்களையும் எண்ணற்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து இந்தியா உதவி இருக்கிறது.



இவ்வாறு அவர் பேசினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல

Mar09

 உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய

Jul16

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப

Feb23

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை