கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்தது.
தற்போது வி.ஐ.பி. மற்றும் ரூ.300 டிக்கெட் கட்டணத்தில் மட்டுமே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இலவச தரிசன கட்டணத்தில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கோவில் உண்டியல் வருமானம் குறைந்தது. கடந்த ஜூன் மாதம் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.36 கோடியே 2 லட்சம் கிடைத்தது.