இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்தால் ரூ.5 அபராதம் விதிக்கப்படும் அல்லது 8 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று இமாச்சல பிரதேச அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் புதிய கோவிட்-19 தொற்றுநோய்கள் பாதிப்பு குறைய தொடங்கியதால், ஒரு மாதத்துக்குள் சுமார் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். சிம்லா மற்றும் மணாலி மலை வாச தலங்களில் சுற்றுலா பயணிகள் கோவிட்-19 விதிமுறைகளைபின்பற்றாமல் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக சுற்றி திரியும் அண்மையில் வெளியாகியது. இதனால் கோபம் கொண்ட மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இமாச்சல பிரதேசத்தை கண்டித்தது.
இதனையடுத்து, இமாச்சல பிரதேச அரசு, மாஸ்க் அணியாமல் சுற்றிதிரியும் சுற்றுலா பயணிகள் மீது ஒடுக்குமுறையை அறிவித்தது. குல்லு எஸ்.பி. குருதேவ் சர்மா இது குறித்து கூறுகையில், மணாலியில் சுற்றுலா பயணிகளுக்காக கோவிட்-19 விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 8 நாட்கள் சிறையில் அடைக்கப்படலாம்.
கடந்த 7 முதல் 8 நாட்களில் நாங்கள் 300 அபராத சல்லான்கள பதிவு செய்துள்ளோம். ரூ.3 லட்சம் அபராதம் வசூலித்துள்ளோம் என்று தெரிவித்தார். இமாச்சல பிரதே முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் அண்மையில் பேட்டி ஒன்றில், மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் நாங்கள் கொஞ்சம் கவலையாக இருக்கிறோம். நாங்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்கிறோம் ஆனால் கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், மாஸ்க் அணிய வேண்டும். எஸ்.ஓ.பி.யை கண்டிப்பாக பின்பற்றும்படி ஹோட்டல்களுக்கும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.