More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆம்பர், கிரீன் பட்டியல்களில் இடம்பிடித்துள்ள நாடுகள் எவை? இங்கிலாந்து அரசு அறிவிப்பு...
ஆம்பர், கிரீன் பட்டியல்களில் இடம்பிடித்துள்ள நாடுகள் எவை? இங்கிலாந்து அரசு அறிவிப்பு...
Jul 09
ஆம்பர், கிரீன் பட்டியல்களில் இடம்பிடித்துள்ள நாடுகள் எவை? இங்கிலாந்து அரசு அறிவிப்பு...

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 1.28 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.



இங்கிலாந்து போக்குவரத்துத் துறை மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில், '15 மாதங்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. கொரோனா தொற்று மிதமாக உள்ள நாடுகளிலிருந்து வரும், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டுள்ளோம்' என தெரிவித்தார்.



இங்கிலாந்து அரசு பயணப் பட்டியலை கிரீன், ஆம்பர் மற்றும் சிவப்பு என வகைப்படுத்தி உள்ளது.



கொரோனா ஆபத்து குறைவாக உள்ள நாடுகள் கிரீன் பட்டியலிலும், ஆபத்தாகக் கருத்தப்படும் நாடுகள் ஆம்பர் பட்டியலிலும், மிக ஆபத்தாகக் கருதப்படும் நாடுகள் சிவப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், கிரீன் பட்டியல் மற்றும் ஆம்பர் பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:



கிரீன் பட்டியலில் இடம்பெற்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது. ஆனால் அவர்கள் 2 நாட்களுக்கு பிறகு பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. 



அங்குய்லா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பெர்முடா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், புரூனே, கேமன் தீவுகள், டொமினிகா, பால்க்லாந்து தீவுகள், ஜிப்ரால்டர், கிரெனடா, ஐஸ்லாந்து, இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம், மடெய்ரா, மால்டா, மான்ட்செரட், நியூசிலாந்து, சிங்கப்பூர், தெற்கு ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள், டர்க்ஸ் மற்றும் கெய்காஸ் தீவுகள் ஆகியவை கிரீன் பட்டியலில் அடங்கும்.



ஆம்பர் பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகளில் வசிக்கும் இங்கிலாந்து நாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்று இருந்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது.  



அவர்கள் நாடு திரும்புவதற்கு 3 நாள் முன்னதாக பிசிஆர் டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். இங்கிலாந்து திரும்பியபின் 2ம் நாள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.



குறிப்பிட்ட இடங்கள் செல்வதற்கு முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் புறப்படுவதற்கு முந்தைய சோதனை, இங்கிலாந்தில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் 2 மற்றும் நாள் 8-ம் நாள் பரிசோதனை செய்ய வேண்டும்.



ஆஸ்திரியா, பஹாமாஸ், பெல்ஜியம், கனடா, சீனா, குரோசியா, சைப்ரஸ், பிரான்ஸ், கிரீஸ், இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, போர்ச்சுக்கல், சவுதி அரேபியா, ஸ்பெயின், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்டவை ஆம்பர் பட்டியலில் உள்ளன.



ஆம்பர் அல்லது கிரீன் பட்டியல்களில் இல்லாத அனைத்து நாடுகளும் சிவப்பு பட்டியலில் உள்ளன. சில ஆம்பர் பட்டியல் நாடுகளும் சிவப்பு கண்காணிப்புப் பட்டியலில் உள்ளன.



பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் பிரஜைகள் அல்லது இங்கிலாந்தின் குடியிருப்பு உரிமை உள்ளவர்கள் மட்டுமே சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் - இருப்பினும் அந்த நாடுகளுக்கு பயணம் செய்ய அறிவுறுத்தப்படவில்லை.



பயணிகளுக்கு முழு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், அவர்கள் பயணம் செய்வதற்கு முன் ஒரு பி.சி.ஆர் பரிசோதனை செய்து, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் தொகுப்பை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 



இங்கிலாந்து திரும்பும் அவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 2 மற்றும் 8-ம் நாள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

 உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக

Mar14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Aug28

ஆப்கானிஸ்தான் நாட்டை 

  அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில

Nov04

வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச

Mar22

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்

Mar01

உக்ரைனில் போரின் காரணமாக பதுங்கு குழியில் வாழ்ந்து வர

Dec28

 ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட

Sep26

மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி

May15

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம்

Mar14

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது ந

Dec20

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்

Apr06

வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக

Aug11

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்

Feb25

இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற