மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்களுக்கு பிறகு மந்திரிகளின் சராசரி வயது 61-ல் இருந்து 58 ஆக குறைந்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நிசித் பிரமாணிக் (வயது 35) மிக இளம் வயது மந்திரி என்ற பெயரைப் பெறுகிறார்.
வயதான மந்திரி என்ற பெயர் சோம்பிரகாசுக்கு (72) கிடைத்துள்ளது.
50 வயதுக்குட்பட்ட மந்திரிகள் ஸ்மிரிதி இரானி (45), கிரண் ரிஜிஜூ (49), மன்சுக் மாண்டவியா (49), கைலாஷ் சவுத்ரி (47), சஞ்சீவ் பல்யான் (49), அனுராக் தாக்குர் (46), பாரதி பிரவின் பவார் (42), அனுபிரியா சிங் படேல் (40), சாந்தனு தாக்குர் (38), ஜான் பர்லா (45), எல்.முருகன் (44) ஆவார்கள்.
புதிதாக நேற்று பதவி ஏற்ற 43 மந்திரிகளின் சராசரி வயது 56.