More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடிப்போம் -
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடிப்போம் -
Jul 03
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடிப்போம் -

கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடிப்போம். நாட்டின் அபிவிருத்தித்  திட்டங்களை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம்.



என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.



தெற்கு அதிவேக வீதியின் கபுதுவ பிரதேசத்தின் நுழைவாயிலைத் திறந்து வைக்கும்  நிகழ்வு நேற்று (02) அலரிமாளிகையில் இருந்து வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.



இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



அன்று பின்தங்கிய பிரதேசங்களாக ஒதுக்கப்பட்ட பல கிராமங்கள், நாட்டில் நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றன.



நாட்டு மக்கள் மருத்துவமனைகள் மற்றும் தமது தொழில்புரியும் இடங்களுக்கு குறித்த நெடுஞ்சாலைகள் மூலம் சென்று வருகின்றனர்.



இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்க்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.



ஒரு சிலர் கொரோனாத் தொற்று முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.



இவ்வாறு சொல்பவர்கள் உண்மையாகவே சொல்கிறார்களா, இல்லையா என்பது தொடர்பில் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.



கொரோனாவைக் காரணம் காட்டி ஒன்றையும் செய்யமுடியாதென்று கூறினால் அது நாட்டு மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும்.



நாம் நாட்டு மக்களை முறையாகப் பாதுகாப்போம். அதற்காக ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டால் முடியாதது எதுவும் இல்லை – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

 நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்

Aug23

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி

Mar08

பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்ட

Jan30

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா

Oct01

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்

Oct05

வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க

Apr09

காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம

May03

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக

Jul05

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று

Jan25

2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் ய

Mar11

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி

Jul17

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க

Sep30

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற

Aug13

கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ

Mar03

இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம