More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மோதல்... பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா!
மோதல்... பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா!
Jul 03
மோதல்... பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா!

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலானவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என்பதை உலகமே அறியும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரபல தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது.



தொலைக்காட்சி நிறுவனத்தோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது தொழில்முறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு, எனக்கு அநீதி நிகழ்த்தப்பட்டது. பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள்.



பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்' என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan18

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும்

Oct13

காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்

Sep19

ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனர

Feb17

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண

Jul06

வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ

May03

ஜெய் பீம்

கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில்

Feb04

பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப

Apr12

இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ

May13

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்

Oct13

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந

Jan25

பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர

Sep06

தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தா

Jul08

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து

Aug16

நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்

May10

பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற