முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான இணையவழி கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களினதும் பிரதேச செயலாளர்கள் ,துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களின் வலயக்கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிநிலை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்
இதன்போது குறித்த செயற்றிட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது இதில் உள்ள குறைபாடுகள், சவால்கள் என்பன தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு இணைய வசதிகள் இல்லாத இடங்களில் இணைய வசதியை ஏற்படுத்துவது பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது