நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலுக்கு சென்ற
நெடுந்தீவு 08ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் ( வயது 65 )
என்பவர் இதுவரை கரை திரும்பபவில்லை.
இன்று காலை 07; 30 மணிக்கு வீட்டிலிருந்து நண்டுவலை தொழிலுக்கு
கட்டுமரத்தில் சென்று இருந்தார்
இவரது துவிச்சக்கர வண்டி கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது
ஆனால் கடலுக்கு சென்றவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை
இதனால் கடற்படையினர் உதவியுடன் தேடும் பணியில் மக்கள் இறங்கி
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.