More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
Jul 01
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று கட்டுப்படுவதை பொறுத்து அவ்வப்போது அரசு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.



கடந்த மாதம் 28-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய் தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.



முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 2-வது வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்பட 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 3-வது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன.



இதில் 3-வது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களுக்கும் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மற்ற 2 வகை மாவட்டங்களுக்கும் தளர்வுகளுடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. இந்த ஊரடங்கு வருகிற 5-ந் தேதி முடிவடைகிறது.



இந்தநிலையில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை காலை 11 மணிக்கு சென்னை கோட்டையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுனர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.



அப்போது தற்போதைய கொரோனா தொற்று நிலவரங்களை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற வகையில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.



முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களிலும் இன்னும் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. வெளியூர்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை உள்ளது. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.



கொரோனா தொற்று மாநிலம் முழுவதும் குறைந்து இருப்பதால், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமை

Feb25

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ

Jan18

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா

May14

1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க

Dec31

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்

Jun19

பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத

Jun29
Oct03

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி

Aug18

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப

Oct24

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ

Apr05

மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம

Apr13

மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ

Jun07