More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 26000 பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்தது!
26000 பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்தது!
Jul 05
26000 பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்தது!

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளன.



இதன்படி 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.



இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன. அதற்கமைய இதுவரையில் 41 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ள சைனோபார்ம் தடுப்பூசிகள் 1 911 208 பேருக்கு முதற்கட்டமாகவும் , 836 814 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன. 



மேலும் 925 242 பேருக்கு அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் முதற்கட்டமாகவும் 384 047 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன. 



ஸ்புட்னிக் தடுப்பூசிகள் 114 795 பேருக்கு முதற்கட்டமாகவும் 14 427 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.



இதேவேளை கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள சிறுநீரக மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவில்லை எனில் அவர்கள் தங்களது விபரத்தினை கொழும்பு மாநகரசபையின் தொற்று நோயியல் பிரிவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.



இவ்வாறான நோயாளர்கள் தமது பெயர் , தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போது வழங்கப்பட்ட அட்டை மற்றும் ஏனைய நோய்களுக்கான கிளினிக் அட்டை ஆகியவற்றின் புகைப்படப்பிரதிகள் என்வற்றை  epidunitcmc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் உரிய அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொள்வார் என்றும் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா

Jul17

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக

Jan25

உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற

Sep19

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி

Sep20

நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில

Sep21

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா

Sep20

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க

Jun11

இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சே

Jan19

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

Feb14

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின

Mar22

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது

Jun02