விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தும், விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக்கும் முயற்சியில் நடிகை சார்மி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சார்மி, தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் படத்தை தயாரித்து வரும் சார்மி, அடுத்ததாக தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.