More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
Jul 04
இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-



பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்தெந்த சாதிகளை சேர்த்து, இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 102-வது திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று மராத்தா வழக்கில் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.



கோர்ட்டு தீர்ப்பால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும், இந்த சமூக அநீதியைக் களைய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதை இப்போது மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக அரசியல் சட்டத்தின் 342-வது பிரிவை திருத்தும் மசோதாவை வரும் 19-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul05

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு

Mar28

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர

Mar09

 கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்

Jan29

விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு

Jan19

கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே

Jan17

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை

Jul07