முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் ஆஸ்பத்திரியில் இருந்த மு.க.ஸ்டாலின் பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்பினார்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ளப்படும் மருத்துவ உடல் பரிசோதனை இப்போது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உடல் பரிசோதனை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு கோட்டைக்கு சென்று ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றார்.