துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்தநாள்.
இதையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் மக்கள் சேவையாற்ற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
இந்த பொன்னான பிறந்த தினத்தில் நீங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து பல ஆண்டுகள் இந்த நாட்டுக்காக சேவையாற்ற வாழ்த்துகிறோம்.