More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன!
 தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன!
Jul 01
தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன!

யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆரம்பத்திலும் கொரோனா நோய்க்கு எதிரான சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன.



இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.



இதன்படி கடந்த 28 ஆம் திகதி 10,110 பேருக்கும் 29 ஆம் திகதி 13,182 பேருக்கும் 29 ஆம் திகதி 10,090 பேருக்கும் ஆக மொத்தம் 33,382 பேருக்கு யாழ். மாவட்டத்தில் 2 வது தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது.



இந்நிலையில் தொடர்ந்து ஜூலை 01 ஆம் 02 ஆம் திகதிகளிலும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெறும். இந்த 5 நாட்களிலும் 2 வது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் காலை 8 மணி முதல் தடுப்பூசி வழங்கப்படும்.



தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி யாழ். போதனா வைத்திய சாலையிலும் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலைகளிலும் வழங்கப்பட்டிருந்தது.



இவர்களுக்கான 2 வது தடுப்பூசி ஜூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் இதே வைத்தியசாலைகளில் வழங்கப்படும். எனவே தவறாது குறிக்கப்பட்ட இந்த தினத்தில் சமூகமளித்து உங்களுக்கான 2 வது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்

Jan10

எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில

Oct16

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார

Jul13

கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த

Feb14

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண

Mar08

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ

Feb04

பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

Feb21

இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்

Feb04

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்

Feb12

கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள

Oct08

யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Mar24

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து

Aug17

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல

Feb04

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ