ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
ஓமனில் நேற்று ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 536 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 1,569 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 87.5 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 43 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 56 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 525 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.