More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு: மந்திரி சுரேஷ்குமார்!
கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு: மந்திரி சுரேஷ்குமார்!
Jun 26
கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு: மந்திரி சுரேஷ்குமார்!

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது



கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள், கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அதிகாரிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பெற்று பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். குழந்தைகள் நீண்ட காலம் வீடுகளில் இருப்பது அவர்களது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. கடந்த காலங்களில் பள்ளிகளில் இருந்து கொரோனா பரவவில்லை.



கொரோனா பாதிப்பு குறைந்தால் பள்ளிகளை திறக்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. பள்ளிகளுக்கு வர குழந்தைகள் மிக ஆர்வமாக உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டை போல் பள்ளிகளில் வித்யாகம திட்டத்தை தொடங்கி வகுப்புகளை நடத்தலாம் என்று சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால் கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.



அதுவரை ஆன்லைன், சமூக வலைத்தளங்கள், கல்வி தொலைக்காட்சி மூலம் குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 10-ம் வகுப்பு தேர்வை பாதுகாப்பான சூழலில் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வருகிற 28-ந் தேதி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்

Sep28

தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த

Aug07

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள

Feb19

’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு

Feb12

சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி

Jun18

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்

Jan25

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி

Mar20

இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ

Jan20

புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தன

Aug12

பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல

Feb07

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம

Oct24

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில

May29

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க

Oct01

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க