More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடி பேச்சு!
விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடி பேச்சு!
Jun 24
விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடி பேச்சு!

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்போது விண்வெளியில் விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கு நீ ஹைசெங், லியு போமிங், டாங் ஹோங்போ என்னும் 3 வீரர்களையும் கடந்த 17-ந் தேதி அனுப்பி வைத்துள்ளது. இது ஒரு சாதனையாக சீனாவால் பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் சீன விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்த 3 வீரர்களுடனும் அதிபர் ஜின் பிங் நேற்று பீஜிங்கில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடியே முதல் முறையாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். அவர்களது விண்வெளி ஆய்வுப்பணிக்காக ஜின்பிங் நன்றி தெரிவித்தார்.



அப்போது அவர், “நீங்கள் 3 மாதங்கள் விண்வெளியில் செலவிடுவீர்கள். விண்வெளியில் இருக்கும்போது நீங்கள் செய்யும் வேலையும், உங்கள் வாழ்க்கையும் சீன மக்களின் இதயங்களில் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.



தொடர்ந்து அவர் விண்வெளி வீரர்களுடன் பேசும்போது, “நமது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். இது விண்வெளியை மனித குலத்தின் அமைதியான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும்” எனவும் குறிப்பிட்டார்.



3 வீரர்களும் தங்களுக்கு அளித்து வருகிற ஆதரவுக்காக ஜின் பிங்குக்கு மனமார நன்றி தெரிவித்தனர். 5 நிமிடம் நடந்த இந்த உரையாடல் சீன அரசு டெலிவிஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த 3 விண்வெளி வீரர்களும் அடுத்த 3 மாதங்களில் ‘தியாங்காங் ஹெவன்லி பேலஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த விண்வெளி நிலையத்தை கட்டி முடிப்பார்கள். இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீட

Oct02

கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் ச

Mar27

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்

Mar06

வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள

Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள

Mar26

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர

Feb02

அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால்  30 க்

May27

ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி

Feb06

அழகுக்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையில

Sep30

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ

Feb04

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி

Jun27

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ

Mar16

உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர

Dec29

 ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட

Mar07

"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல