கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்களை மிரட்டி வருகிறது. அதற்கான சிகிச்சையில் ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரத்து 120 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் இந்த மருந்து குப்பிகள் சுமார் 7.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அளவு மருந்து கிடைக்கும் நிலை பராமரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.