More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இந்தியாவின் நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் – இராணுவத் தளபதி
இந்தியாவின் நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் – இராணுவத் தளபதி
Jun 23
இந்தியாவின் நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் – இராணுவத் தளபதி

மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது. நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும்.”



-இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“இந்தியாவில் ‘டெல்டா’ கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் கொடூர தாக்கங்களை நாள்தோறும் அறிகின்றோம். எனவே, மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.



‘டெல்டா’ வைரஸ் கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை என்ற பிரதேசத்தில் ஒரு பகுதியில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம்.



ஆனால், அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் இந்தப் பேரழிவைத் தடுக்கலாம். அதைவிடுத்து முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது. அன்றாடம் வேலை செய்யும் மக்களைப் பட்டினியால் சாகடிக்க முடியாது” – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb18

ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி

Jan20

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக

Feb03

தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

Aug10

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச

Jan25

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை

Mar23

பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட

Sep16

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி

Sep21

மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக

Mar14

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு

Jan21

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி

Jan22

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர

Jan20

விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு

Mar01

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி

Jan15

அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்

Jul13

நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத