More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் - நவாலியில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம்!
வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் - நவாலியில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம்!
Jun 20
வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் - நவாலியில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம்!

புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் - நவாலியில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



2 ஆயிரத்து16ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், உலக வங்கியின் "ஐ" செயற்றிட்டத்தின் கீழ் தற்போது புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நவாலி- ராஜ ராஜேஸ்வரி வீதியை முழுமையாக செப்பனிட்டு தருமாறு கோரிய் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,



இந்த ராஜ ராஜேஸ்வரி வீதியானது, சி.பி.எம். வீதியிலிருந்து கொத்துக்கட்டி வீதி வரை புனரமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வீதியானது சி.பி.எம். வீதியிலிருந்து கோவில் வீதிவரை புனரமைக்கப்படுகிறது.



"ஐ" செயற்றிட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் இவ் வீதியால், உலக வங்கிக்கோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ அல்லது மானிப்பாய் பிரதேச சபைக்கோ நற்பெயர் ஏற்பட வேண்டும் என்றால், உலக வங்கியின் நிதியைப் பெற்று குறித்த வீதியின் மிகுதி வேலைகளையும் பூரணப்படுத்த வேண்டும்.



இவ் வீதியானது அராலி, மூளாய் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியோடு இணைகிறது. ஆகையால் இவ் வீதியினை பல மக்கள் பயன்படுத்துகின்றனர்.



மழை காலத்தில் இவ் வீதியால் பயணம் செய்பவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிரிகொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விடயத்தில் கரிசினை காட்டி புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி 200 மீட்டர் நீளமுள்ள வீதியினையும் புனரமைப்பில் உள்ளடக்க வேண்டும்-என்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct16

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய

Jun26

நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள

Sep19

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்

May30

 மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த

Oct17

நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு

Apr19

உயிர்த்தஞாயிறுதின  குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Sep30

இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவ

Oct26

நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை

Sep21

பண்டாரவளை பூனாகலை தோட்ட தொழிற்சாலையில் உள்ள இலங்கை தொ

Jan27


எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத

Jul26

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த

Jun27

நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச

Feb04

இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம்

Mar27

பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்