More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி 24-ம் தேதி ஆலோசனை!
காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி 24-ம் தேதி ஆலோசனை!
Jun 20
காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி 24-ம் தேதி ஆலோசனை!

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு -- காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டசபையை உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



தற்போது ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்தும், சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி காஷ்மீரில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.



இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் 24-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது.



இவர்களில், முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, குலாம்நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் அடங்குவர். 14 தலைவர்களும் கொரோனா பரிசோதனை நடத்தி, கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்பதற்கான சான்றிதழுடன் வருமாறு மத்திய அரசு கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul26

பிக்பாஸ் பிரபலம் 

பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்

Jul04

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ

Mar26

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்

Mar11

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப

Nov05
Dec21

அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின

Mar05

 கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர

Oct07

திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட

Jul11

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண

Aug12

மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங

Oct02

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந

Jan18

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்

Feb03

இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த

Aug02

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி