மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 4 பேர் மரணமடைந்துள்ளதுடன் 54 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 3637 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 54 மரணங்கள் ஏற்பட்டுள்ளததாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை கடந்த ஏப்பில் 22 ம்திகதி முதல் 3 வது கொரோனா அலையில் 2711 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 42 பேர் மரண மடைந்து ள்ளதுடன் கடந்த 7 நாட்களில் 770 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த 3 தினங்களில் 9148 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.