பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் சிவாஜி. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் 14 வருடத்திற்கு முன் இதே நாளில் வெளியானது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார்.
ரஜினியுடன் வடிவுக்கரசி, மணிவண்ணன், சாலமன் பாப்பையா, ராஜா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.
இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதை கொண்டாடி வருகிறார்கள்.