More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மாஸ்க் அணியாத பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்!
மாஸ்க் அணியாத பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்!
Jun 15
மாஸ்க் அணியாத பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்!

கொரோனா-வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.



அந்த நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் அலட்சியப் போக்கே இந்த சுகாதார நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.



ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரசை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டுப் பேசி வரும் போல்சனாரோ, கொரோனா-வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியமற்றவை என்று கூறி வருகிறார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.



இந்நிலையில், சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார்.



இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம், கொரோனா தடுப்பு விதிமுறைகளைமீறி மாஸ்க் அணியாமல் அதிக அளவில் ஆட்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டதாகக் கூறி அதிபர் போல்சனாரோவுக்கு 100 அமெரிக்க டாலர் ‌(இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,300 ) அபராதம் விதித்துள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun28

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்

Mar27

ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக

Jun01

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Nov09

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த

Apr01

தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப

Aug04

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்க

Sep09

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,

Nov03

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ்.

Jun30

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Mar07

உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி

Jan26

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்

Oct26

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட

Oct02

தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி

Jun03

ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒ

Feb24

ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்த