More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைவு!
சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைவு!
Jun 15
சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைவு!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.



இதையும் படியுங்கள்...சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது -சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்





இதனையடுத்து, சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகினர்.



இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.



இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் டேராடூன் விரைந்துள்ளனர்.



சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov17

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட

Jul24

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செ

Jan15

 இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்

Aug18

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்

Dec21

இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த

Apr19

கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட

Jan23

மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா

Oct25

சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ

May16

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்

Apr30

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர

Apr24

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை

Jul22

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா

Nov27

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர

Apr19

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த

May27

மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள