More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 2024 தேர்தலிலும் பிரதமர் மோடியே மீண்டும் வெற்றி பெறுவார் - தேவேந்திர பட்னாவிஸ் உறுதி!
2024 தேர்தலிலும் பிரதமர் மோடியே மீண்டும் வெற்றி பெறுவார் - தேவேந்திர பட்னாவிஸ் உறுதி!
Jun 14
2024 தேர்தலிலும் பிரதமர் மோடியே மீண்டும் வெற்றி பெறுவார் - தேவேந்திர பட்னாவிஸ் உறுதி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடந்தது.



இந்த சந்திப்பு நடந்த மறுநாள், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி தேவைப்படுகிறது என்றார்.



இந்நிலையில், எதிர்க்கட்சிகள் என்ன திட்டம் போட்டாலும் 2024 தேர்தலிலும் பிரதமர் மோடி தான் வெற்றி பெறுவார் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:



யார், யாரை சந்திக்க வேண்டும் என எந்த தடைகளும் கிடையாது. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் அவர்களுக்கு ஏற்ற வகையில் வியூகங்களை அமைக்கலாம். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.



யார் என்ன வியூகங்களை வகுத்தாலும், இன்று மோடி உள்ளார். அவர் தான் 2024-லிலும் இருப்பார். பா.ஜ.க., பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகங்கள் அமைத்தாலும் 2024-ல் பிரதமர் மோடியின் கீழ் தான் புதிய அரசு அமையும் என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul07

மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ

Feb27

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர

Feb17

உத்தர  பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி

Mar08

அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த

Jun26