யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஆலடிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஏ – 09 நெடுஞ்சாலையில் கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் குறித்த பிள்ளையார் ஆலயம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபொது ஆலயம் இடிவடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் கொடிகாமம் காவற்துறையருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. கொடிகாமம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.