More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை கடலில் சட்டவிரோதமாக கப்பல் நுழையவில்லை!
இலங்கை கடலில் சட்டவிரோதமாக கப்பல் நுழையவில்லை!
Jun 09
இலங்கை கடலில் சட்டவிரோதமாக கப்பல் நுழையவில்லை!

எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இலங்கைக் கடற்பரப்பில் நுழையவில்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.



அத்தோடு, மோசமான காலநிலை காரணமாகவே கப்பல் தீப்பிடித்திருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.



நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது-



“குறித்த கப்பல் ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கும் ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கும் செல்லும் கப்பல்.



தீப்பிடித்த இந்தக் கப்பல் சிங்கப்பூரில் ஆரம்பித்து ஆறு நாடுகளுக்கு பயணிக்கும் கப்பலாகும்.



மே 17ஆம் திகதி வரவேண்டிய கப்பல் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களுக்குப் பின்னர் வந்தது.



இதில் 1,466 கொள்கலன்கள் இருந்தன. அதில் 513 கொள்கலன்கள் இலங்கையில் இறக்க வேண்டியவையாகும். ஆகவே, இது ஒரு இரகசியக் கப்பல் என எவரும் கூற முடியாது.



அதேநேரம், கப்பல் விபத்துக்குள்ளானதை அறிந்து கொண்டவுடன் இலங்கைக் கடல் எல்லையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



கடலில் எதுவிதமான இரசாயனங்களும் கலக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். கடலில் கலக்கப்பட்ட கழிவுகளை நாம் முழுமையாக அகற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.



எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் எமது கடல் பரப்பை முழுமையாகச் சுத்தப்படுத்தி விடுவோம். அதேபோல் நட்டஈடு எடுக்கப்படும். ஆனால், அது உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது.



எனினும், இடைக்கால நட்டஈடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ

May15

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத

May23

கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த

Feb17

கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க

Oct03

மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற

Jun12

முதலாவது செய்தி

தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட

Feb04

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்

Sep14

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்

Oct10

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள

Mar16

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில

Jun07

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி

Oct17

உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர

May02

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி

Oct08

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ

Sep23

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச