நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த ஆலய உற்சவம் தற்போது நாட்டில் உள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்கள்
இம்மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்த நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.