More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தியாவில் காணப்பட்ட வைரஸ் 53 நாடுகளில் பரவல்- உலக சுகாதார அமைப்பு தகவல்!
இந்தியாவில் காணப்பட்ட வைரஸ் 53 நாடுகளில் பரவல்- உலக சுகாதார அமைப்பு தகவல்!
May 29
இந்தியாவில் காணப்பட்ட வைரஸ் 53 நாடுகளில் பரவல்- உலக சுகாதார அமைப்பு தகவல்!

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வார பாதிப்பு குறித்த புள்ளி விவரம் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:-



உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 14 சதவீதம் குறைந்திருக்கிறது.



உயிரிழப்பவர்களின் விகிதம் 2 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த வாரம் 41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்புக்கு 84 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.



புதிய உருமாறிய பி.1.617 கொரோனா வைரஸ் வகை முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனா இப்போது 53 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த பி.1.617.1, வைரஸ் வகை இப்போது பி.1.617.2 மற்றும் பி.1.617.3 என்ற மூன்று உருமாற்றங்களை அடைந்துள்ளது.



இதில் பி.1.617.1 வகை கொரோனா 41 நாடுகளில் காணப்படுகிறது. பி.1.617.2 வகை கொரோனா 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை கொரோனா 6 நாடுகளிலும் காணப்படுகிறது.



பி.1.617 கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய வகை என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்றும், அதன் நோய் தாக்கமும், மறுபாதிப்பு அபாயம் குறித்த விவரங்கள் ஆய்வில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, முந்தைய 7 நாட்களில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 55-ஆக பதிவாகி உள்ளது. இது முந்தைய வார பாதிப்பை விட 23 சதவீதம் குறைவாகும்.



அதுபோல் அமெரிக்கா, கொலம்பியா நாடுகளிலும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 410-ஆக பதிவாகி, பாதிப்பு விகிதம் 20 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. கொலம்பியாவில் புதிய பாதிப்பு 1 லட்சத்து 7 ஆயிரத்து 590-ஆக பதிவாகி பாதிப்பு விகிதம் 7 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.



அதேநேரம் பிரேசிலில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 424-ஆக பதிவாகி, பாதிப்பு விகிதம் 3 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. அர்ஜென்டீனாவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 46-ஆக பதிவாகி பாதிப்பு விகிதம் 41 சதவீதமாக உயர்ந்துள்ளது.



கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த 4 வாரங்களாக குறைந்து வருகிற போதிலும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. பல நாடுகளில் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முந்தைய வார உயிரிழப்புகளை விட 4 சதவீதம் அதிகரித்துள்ளது.



இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 2.1 நபர்கள் என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இது 4 சதவீதம் அதிகரிப்பாகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது

Sep24

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந

Mar21

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச

May28

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்

Feb02

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75

Mar03

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Mar03

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட

Apr15

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ

Apr29

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு

Mar17

உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெறும் போரை நிறுத்த ரஷ்யா முன

Feb03

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்ற

Feb04

எகிப்தில்  2000  ஆண்டு பழமையான தங்க நாக்கினைக்  கொண

Apr09

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

Mar05

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jun12

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்