More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
யாழில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
May 29
யாழில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அரசின் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது 



குறித்த கூட்டத்தில் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்



கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர்



யாழ்ப்பாண மாவட்டத்திலே தொற்று நிலைமை தீவிரமடையும் காரணத்தினால் நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அந்தக் கோரிக்கையை ஏற்றுஅதிமேதகு ஜனாதிபதி அவர்கள்    ஐம்பதாயிரம் தடுப்பூசிகளை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அது இன்று மாலை கிடைக்கப் பெறலாம் .அல்லது நாளை காலை கிடைக்கப் பெறலாம். கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு அமைய இதுவரை காலமும் எங்களுடைய மாவட்டத்திற்கு அதிகளவாக இனங்காணப்பட்ட பிரதேசத்திலேயே முதற்கட்டமாக தடுப்பூசிகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். கிராம சேவையாளர் பிரிவில் தொற்டுக்கொள்ள அவர்களின் அடிப்படையில் மத்தியில் இதனை நாங்கள் வழங்க உள்ளோம் எனமாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்.



தெரிவித்தார் .தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி கிடையிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலின் பின் மாவட்டச் செயலாளர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.



கிராம உத்தியோகத்தர் பிரிவில் அதிக கொரோனா இழப்புக்கள் இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தெரிவுசெய்து அவர்களுக்கு முதல் அடிப்படையில் நாங்கள் தடுப்பூசிகளை வழங்க உள்ளோம். முதலில் அந்த கிராம சேவையாளர் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாங்கள் இந்த தடுப்பூசிகளை வழங்க உள்ளோம்.



இந்தத் திட்டமானது நாடளாவிய ரீதியில் இதே ஒழுங்கில் நடைபெறுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இதே ஒழுங்கில்  தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. யாழ் மாவட்டத்தில் சுமார் 12 அல்லது 13 மத்திய நிலையங்களில் இந்தத் தடுப்பூசிகளின் நாங்கள் வழங்க உள்ளோம். சுகாதார தொண்டர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளோம்.



ஆனால் நாங்கள் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளோம். இரண்டாம் கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக அதிகமாக தொற்று காணப்பட்ட அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த இடத்துக்கு முன்னேறி வழங்கப்படுகின்றது.



இந்த தடுப்பூசி வழங்குவது தொடர்பான தகவல்களை நாங்கள் குறித்த பிரதேசத்தில்  உரிய சுகாதார பணியாளர்களுக்கு வழங்கியுள்ளோம். அதேபோல் பிரதேச செயலாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் உதவி புரிவார்கள். மக்கள் அவர்களுக்கு என குறித்து ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul15

அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலு

Mar24

மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம

Apr01

பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, ​​இடம்பெற்ற வா

Feb04

இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ

Feb04

மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ

Mar10

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக

Oct24

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ

Jan28

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம

May11

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வி

Jul05

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று

Sep23

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்

Feb07

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய

Oct13

எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க