ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரிகள், மாநில நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கொரோனாவுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி, மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.