More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பயணக் கட்டுப்பாட்டுக்குள்- கந்தரோடையில் அச்சுறுத்தி பெரும் நகைகள் கொள்ளை!
பயணக் கட்டுப்பாட்டுக்குள்- கந்தரோடையில் அச்சுறுத்தி பெரும் நகைகள் கொள்ளை!
Jun 03
பயணக் கட்டுப்பாட்டுக்குள்- கந்தரோடையில் அச்சுறுத்தி பெரும் நகைகள் கொள்ளை!

பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது.



இச் சம்பவம் இன்று அதிகாலை 03.30 மணியளவில் கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது.



கோடாரி, கத்திகளுடன் முகங்களைத் துணிகளால் முழுமையாக மறைத்தவாறு வீடொன்றுக்குள் உள்நுழைந்த திருடர்கள் குழு வீட்டில் உறக்கத்திலிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கியும், அச்சுறுத்தியும் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.



கந்தரோடை மேற்கு சங்காவத்தை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.



குறித்த வீட்டு உரிமையாளரான வயோதிபப் பெண்மணியின் மகனின் முதலாவது ஆண்டுத் திவசம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் வேலைகள் செய்த அசதியில் வீட்டிலிருந்த அனைவரும் உறங்கியுள்ளனர்.



தற்செயலாக வீட்டின் ஒரு கதவு ஒரு லொக் மட்டும் போட்டுப் பூட்டியிருந்த நிலையில் குறித்த கதவினைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் நேராக அறைக்குள் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த கணவனையும், மனைவியையும் தட்டி எழுப்பியுள்ளனர்.



பின்னர், அவர்களை அங்கிருந்து எழும்பக் கூடாது எனக் கணவனைக் கோடாரியாலும், தென்னை மட்டையாலும் தாக்கியுள்ளதுடன் அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர்.



இந்நிலையில் மனைவி ஐயோ... ஐயோ... என அவலக் குரல் எழுப்பவே வீட்டின் விறந்தையில்; உறங்கிக் கொண்டிருந்த வயோதிபப் பெண்மணி தனதுமகளிடம் என்னம்மா எனக் கேட்டுள்ளார்.



இதனையடுத்துக் குறித்த வயோதிபப் பெண்ணின் குரல் வந்த திசை நோக்கி ஓடிச் சென்ற திருடர்கள் அவரையும் தாக்கி அச்சுறுத்தியதுடன் மகளின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.



மகள் அணிந்திருந்த மூன்று பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலியைக் கழுத்தைத் திருகி இழுத்த அறுத்த திருடர்கள் அணிந்திருந்த ஒன்றரைப் பவுண் பெறுமதியான கைச் சங்கிலி, இரண்டு மோதிரம், காப்புகள்   என்பவற்றையும் பறித்தெடுத்தனர். இதனால், குறித்த பெண்ணின் கழுத்தில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன.



அத்துடன் குறித்த வயோதிபப் பெண்மணியின் மூத்த மகளையும் கடுமையாகத் தாக்கி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், காப்புகள் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர். தாக்குதல் காரணமாக மேற்படி பெண்ணின் கையிலும் காயங்கள் காணப்படுகின்றன. 



குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அவசரத் தொலைபேசி இலக்கம் அழைப்பு ஊடாகச் சுன்னாகம்  பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துச் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.



இந்நிலையில் குறித்த வீட்டிலிருந்து உடனடியாக யாருக்கும் தகவல் செல்லக் கூடாது என்பதற்காக அங்கிருந்த இரண்டு கைத் தொலைபேசிகளையும் திருடர்கள் திருடிச் சென்று பக்கத்து வளவுக்குள் போட்டுச் சென்றுள்ளனர்.



இந்தநிலையில் கைத்தொலைபேசிகளில் பதித்திருந்த அடையாளங்களுக்கு அமைய பொலிஸாரின் மோப்ப நாயின் உதவியுடன் குறித்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



 



 



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு

Feb02

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப

Jun11

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை

Jun25

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல

May14

நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல

Jan26

நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான

Jan28

வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்

Mar23

கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்

Apr10

பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ

Jun02