More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பாகிஸ்தானில்நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை10 பேர் பலி!
பாகிஸ்தானில்நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை10 பேர் பலி!
Jun 02
பாகிஸ்தானில்நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை10 பேர் பலி!

இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.‌



இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒகாரா நகரில் உள்ள தாரிக் அபாத் என்ற பகுதியில் கனமழையின் போது ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.



இதில் அந்த வீட்டில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.



அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கினர். எனினும் 3 பெண்கள், நான்கு சிறுவர்கள் உள்பட 8 பேரை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



அதேபோல் ஒகாரா மாவட்டத்தின் ஹஜ்ரா ஷா முகீம் என்ற பகுதியில் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த சுவர் ஒன்று கனமழையால் இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். டோபா தேக் சிங் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep14

மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் 

May08

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான

Feb25

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்

Sep27

பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக

May18

உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப

Mar30

வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்

Feb04

ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு

Feb15

பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ

Jun08

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்

Jul24

திபெத் நாட்டுக்கு சீனா உரிமை கோருவது மட்டுமின்றி, அதை

Mar06

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு க

Oct05

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா

May08

உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச

Nov06

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு

May27

ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி