More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உகாண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலியான பரிதாபம்!
உகாண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலியான பரிதாபம்!
Jun 02
உகாண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலியான பரிதாபம்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா.



முன்னாள் ராணுவ தளபதியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு மந்திரியாக பொறுப்பேற்றார்.இந்த நிலையில் 64 வயதான மந்திரி கட்டும்பா வாமலா நேற்று தலைநகர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது இளம்வயது மகள் நாந்தோங்கோ உடன் இருந்தார்.



அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மர்ம நபர்கள் சிலர் மந்திரி கட்டும்பா வாமலாவின் கார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.



இதில் அவரது மகள் நாந்தோங்கோ மற்றும் கார் டிரைவர் ஆகியோரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். அதே சமயம் மந்திரி கட்டும்பா வாமலா காயங்களுடன் உயிர் தப்பினார்.



அவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.



உகாண்டாவில் மந்திரியை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி

Oct25

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி ம

Nov08

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5

May17

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம

Mar15

ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந

Jul10