More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை!
நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை!
Jun 02
நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை!

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.



அந்த புகார் மனுவில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார்.



இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

 



இந்த நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.



இந்த வழக்கு விசாரணை அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது.



இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள்.



அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்று தெரிவித்துள்ளார். அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஒருவருடன் சாந்தினி உரையாடிய ஆடியோ ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடக்கிறது.



இது மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஆதாரங்கள்தான் வழக்கில் பேசும். சாந்தினி கருக்கலைப்பு செய்த ஆஸ்பத்திரி விசாரணை வளையத்தில் உள்ளது. மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.



இதுபோன்ற விசாரணை அதிரடியாக நடக்கிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.



இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்

Jan19

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம

Jun01

தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ

Jul19

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான

Aug10

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா

Sep03

உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று

Feb06

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண

Mar26

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந

Apr11

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்

Jun15